Monday, July 4, 2016

சிற்றின்பம் ...பேரின்பம்...


சிற்றின்பம் ...பேரின்பம்...

  • படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
  • படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
  • படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
  • படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
  • படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
  • படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
  • என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
  • இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
  • நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
  • நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
  • அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
  • அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
  • செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
  • செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
  • செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
  • செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
  • புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
  • அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
  • இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
  • வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
  • நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
  • நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
  • உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
  • உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
  • இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
  • துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
  • எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
  • எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
  • பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
  • மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
  • பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
  • பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
  • சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
  • எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
  • பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
  • தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
  • அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
  • அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
  • அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
  • அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
  • அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
  • அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
  • பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
  • பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
  • முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
  • முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
  • இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
  • கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
  • உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
  • உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
  • புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
  • புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
  • மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
  • மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
  • மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
  • மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
  • மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
  • மனதைக் கடந்தால் பேரின்பம்.
  • வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
  • எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
  • பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
  • மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
  • அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
  • அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
  • தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
  • அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
  • ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
  • ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
  • துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
  • துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
  • ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
  • இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
  • உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
  • இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
  • பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
  • தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
  • இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
  • இன்பமான இன்பமே பேரின்பம்.
  • அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
  • ஞானம் விரும்புவது பேரின்பம்.
  • பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
  • கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
  • சக்தியை இழப்பது சிற்றின்பம்.
  • சக்தியாய் மாறுவது பேரின்பம்.
  • பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
  • பற்றற்று இருப்பது பேரின்பம்.
  • மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
  • மாறாதது நிலைத்தது பேரின்பம்.
  • நிலையற்றது சிற்றின்பம்.
  • நிரந்தரமானது பேரின்பம்.

No comments:

Post a Comment