ஆழ்மனதை பெரிய மகான்களும் தலைவர்களும் மட்டும் தான் பயன் படுத்த முடியும் என எண்ண வேண்டாம் ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' என்று அழைக்கப்படுகிறது.
("Psychokinesis: Mentally influencing external objects or events without the use of physical energy")
நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
மழையை வரவழைக்க மேகராகக்குறிஞ்சி என்ற ராகத்தை வாசிப்பது பண்டைய தமிழகத்தின் ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது.
கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியை நம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
தனிமனிதனானாலும் சமூக மானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நனைபெறத் தொடங்குகின்றன.
மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணத்தை உருவாக்கி கொள்கிறபோது அந்த வேலை கிடைப்பதற்கான வழிவகைகள் தானாக தென்படும் அதற்காக மனதில் நினைத்தால் வேலை கிடைத்துவிடும் என பொருள் இல்லை.
எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காண தீர்வு வழிமுறைகள் உங்களுக்கு தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும்.
இதற்கு அடிப்படைத் தேவை 'image creation' தான் நீங்கள் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஈடுபடும் காரியங்கள் வெற்றி கண்டிருப்பதை நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு அணுகுகின்ற காரியங்கள் தோற்றுப் போய் இருப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.
உள்ளபடியே மனப்பூர்வமாக அந்த காரியத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று நீங்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்பது தான் முக்கியம்.